மகாராஷ்டிராவை சார்ந்த பெண் 20-வது முறையாக கர்ப்பம் ..!

மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பீட் மாவட்டத்தை சார்ந்த லங்காபாய் காராட் என்ற

By Fahad | Published: Apr 01 2020 12:46 AM

மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பீட் மாவட்டத்தை சார்ந்த லங்காபாய் காராட் என்ற பெண்ணுக்கு 11 குழந்தைகள் உள்ளன. அதில் ஐந்து குழந்தைகள் பிறந்து ஒரு வாரத்திலேயே இழந்துள்ளது. மேலும் இவர் மூன்று முறை கருகலைப்பு  செய்து உள்ளார். இந்நிலையில் தற்போது இவர் 20-வது  முறையாக கர்ப்பம் அடைந்துள்ளார். இந்நிலையில் இது குறித்து அம்மாவட்ட  மருத்துவர் அசோக் தொரட் கூறுகையில் , அப்பெண்  கருவுற்றவுடன் மருத்துவ சோதனைகள் செய்யப்பட்டது . அதில் தாயும் , குழந்தையும் நன்றாக உள்ளனர். அவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு சுகாதாரமான இடத்தில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இதற்கு முன் நடந்த அனைத்து பிரசங்கங்களும் வீட்டிலேயே பார்க்கப்பட்டது. இம்முறைதான் முதல்முறையாக மருத்துவமனையில் பிரசவம் பார்க்குமாறு அறிவுறுத்தி உள்ளோம். தற்போது 7 மாத கர்ப்பிணியாக லங்காபாய் காராட் உள்ளார். இவருக்கு அதிக முறை பிரசவம் நடந்துள்ளதால் கர்ப்பபை வலுவிழந்து உள்ளது. அதனால் பிரசவத்தின்போது ரத்தப்போக்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.  அதனால்தான் மருத்துவமனையில் பிரசவம் பார்க்க வலியுறுத்தினோம் என கூறினார்.