மகாராஷ்டிரா அரசியலில் அடுத்த பரபரப்பு ! தேசியவாத காங்கிரஸ் தலைவருடன் பாஜக எம்.பி.திடீர் சந்திப்பு

மகாராஷ்டிரா அரசியலில் அடுத்த பரபரப்பு ! தேசியவாத காங்கிரஸ் தலைவருடன் பாஜக எம்.பி.திடீர் சந்திப்பு

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டிற்கு பாஜக எம்.பி. சஞ்சய் காகடே சென்றுள்ளார். மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பத்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரசின்  அஜித் பவார் பதவியேற்றார்கள்.இவர்களுக்கு ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.திடீரென்று அங்கு அரசியல் மாற்றம் ஏற்பட்ட நிலையில்  காங்கிரஸ்,தேசிய வாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா பாஜக அரசை விமர்சனம் செய்து வருகின்றது. குறிப்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவை குழுத் தலைவர் பொறுப்பில் இருந்த அஜித் பவார் பாஜகவுடன் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனையடுத்து  மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பாஜகவிற்கு ஆதரவு அளித்த அஜித் பவரை சட்டப் பேரவை குழுத் தலைவர் பொறுப்பில்  இருந்து நீக்கம் செய்யப்படுவதாக முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றும் மகாராஷ்டிரா அரசியலில் அடுத்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டிற்கு பாஜக எம்.பி. சஞ்சய் காகடே சென்றுள்ளார்.அவர் சரத்பவார் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  உச்சநீதிமன்றத்தில் பாஜக ஆட்சியமைக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு இன்று  விசாரணைக்கு வர உள்ள நிலையில், திடீர் சந்திப்பால் சிவசேனா, காங்கிரஸ் கலக்கத்தில் உள்ளது .

Latest Posts

விவசாயிகள் தொடர்பான மசோதா விவசாயிகளுக்கும், விவசாயத்துறைக்கும் ஊக்கத்தை அளிக்கும்- அமித் ஷா.!
நாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த தாய்லாந்து எம்.பி
மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு
மேட்டுப்பாளையத்தில் யா‌னை வழுக்கி விழுந்து உயிரிழப்பு...!
மாணவர்கள் கொரோனா காலத்தில் தேர்வெழுத கட்டாயப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல் -கனிமொழி
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.39,496க்கு விற்பனை..!
மத்திய பல்கலைக்கழகத்திற்கான நுழைவுத்தேர்வு தொடங்கியது.!
வெங்காயம் ஏற்றுமதிக்கு இந்தியா தடை: பங்களாதேஷில் கிடுகிடுவென உயரும் விலை.!
மலிங்கா இடத்தை நிரப்புவது எளிதல்ல... ரோஹித் சர்மா..!
#Breaking : நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்க தேவையில்லை -உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு