தொடர் இழுபறி ! ஆட்சி அமைக்க பாஜகவிற்கு அழைப்பு

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜகவிற்கு  ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். மகாராஷ்டிராவில்

By venu | Published: Nov 09, 2019 07:47 PM

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜகவிற்கு  ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் உள்ள  288 சட்டமன்ற தொகுதிகளுக்கு  நடைபெற்ற தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேர்தல் முடிவில் பாஜக  105 தொகுதிகளிலும்,சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது.  சிவசேனா தரப்பில்  50-50 பங்கீடு என்ற உடன்படிக்கையின்படி இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சராக்க பாஜகவிடம் தெரிவித்தது.ஆனால் தேவேந்திர பத்னாவிசும்  முதல்வர் நான்தான் என்று கூறிவந்தார்.இதனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது.   பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றாலும் தனியாக ஆட்சியை அமைக்க முடியாத சூழல் நிலவியது.அதிலும் முதல்வர் பதவியை பாஜகவுக்கு விட்டுக்கொடுக்க சிவசேனா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது.பின்பு  மகாராஷ்டிரா சட்டப்பேரவை ஆயுட்காலம் முடிவடைந்த நிலையில், மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை  முதல்வர் தேவேந்திர பத்னாவிசு சந்தித்து தனது ராஜினாமா கடித்ததை அளித்தார். இந்த நிலையில் பேரவை தேர்தலில் அதிக இடங்களை வென்ற கட்சி பாஜக என்பதால் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளார் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி.
Step2: Place in ads Display sections

unicc