மாநாடு ட்ராப் எதிரொலி! மகாமாநாட்டை கையில் எடுத்த இயக்குனர் சிம்பு!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் ஹீரோவாக நடிக்க இருந்த திரைப்படம் மாநாடு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க இருந்தார். அரசியல் களமாக உருவாக இருந்த இத்திரைப்படத்திற்க்காக சிம்பு வெளிநாட்டிற்கு சென்று உடல் எடையை வெகுவாக குறைத்து இருந்தார்.

ஆனால் சிம்பு, ஹன்ஷிகாவின் 50 வது படம், முஃப்டி தமிழ் ரீமேக் என பிசியாக இருந்ததால் மாநாடு படம் தள்ளிப்போனது. இதனால் மாநாடு படக்குழு திடீரென படம் டிராப் என அறிவித்துவிட்டது.

இதனை தொடர்ந்து, தற்போது, சிம்பு புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்க உள்ளது. இப்படத்துக்கு மகாமாநாடு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மகாமாநாடு தலைப்புதான் கோலிவுட்டில் பேசுபொருளாக உள்ளது. மாநாடு படத்திற்கு போட்டியாக தான் இந்த படத்தை  எடுத்து வருகிறாரா என படக்குழு யோசித்து வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.