மகாலட்சுமியும் , ஈஸ்வரும் முகநூலில் கொஞ்சி கொள்வது போன்ற ஆதாரம் வெளியானது..!

மகாலட்சுமியும் , ஈஸ்வரும் முகநூலில் கொஞ்சி கொள்வது போன்ற ஆதாரம் வெளியானது..!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "வம்சம்" சீரியலில்  வில்லியாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் ஜெயஸ்ரீ. "ஆபிஸ் "என்ற தொடர் மூலம் பிரபலமானவர் ஈஸ்வர். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருவான்மியூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். சமீபத்தில் நடிகை ஜெயஸ்ரீ அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் தனது கணவர் ஈஸ்வர் அவரது தாய் உடன் சேர்ந்து கொடுமைப்படுத்துவதாக கூறினார். மேலும் ஈஸ்வர் பிரபல தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் மகாலட்சுமி என்பவருடன்  தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறினார். இதையடுத்து ஈஸ்வரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளி வந்த ஈஸ்வர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசினார்.அப்போது நான் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதாகவும் , குழந்தையிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும் அவர் கூறியது அனைத்தும் பொய். நடிகை மகாலட்சுமியுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக கூறினார்.ஆனால் ஜெயஸ்ரீ -க்கும் மகாலட்சுமியின் கணவர் அனிலுக்கும் இடையே நட்பிருக்கலாம். மகாலட்சுமியின் கணவர்  அனில் தூண்டுதலின்பேரில் தான் இந்த பிரச்னை நடக்கிறது என கூறினார். இந்நிலையில் மகாலட்சுமியும் , ஈஸ்வரும் முகநூலில் கொஞ்சி கொள்வது போன்ற சில ஆதாரத்தை ஜெயஸ்ரீ வெளியிட்டு உள்ளார்.