மதுரை பல்கலைக்கழக நுழைவு தேர்வு ரத்து – மதுரை காமராஜ் பல்கலைக்கழக துணைவேந்தர்

மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மதுரை காமராஜ் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் பரவல் தீவிரமாக காணப்படுகின்ற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில், கொரோனா வைரசால், 25,872 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 208 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், கொரோனா வைரஸின் தீவிர பரவலால், புதிய மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மதுரை காமராஜ் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார். மேலும், மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், சென்ற அண்டை விட நடப்பாண்டில் அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் துணைவேந்தர் தெரிவித்துள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.