காரை கட்டுப்பாடின்றி இயக்கிய புது மாப்பிள்ளை! துப்புரவு தொழிலாளரின் உயிரை பிரித்த சோகம்!

மதுரை மாவட்டம் மேலமடையை சேர்ந்தவர் ஜெகன் நாதன். இவருக்கு இன்று திருமணம் நடைபெற

By manikandan | Published: Sep 11, 2019 05:26 PM

மதுரை மாவட்டம் மேலமடையை சேர்ந்தவர் ஜெகன் நாதன். இவருக்கு இன்று திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் இவர் மதுரை கோமதிபுரம் அருகே காரை ஒட்டி சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் துப்புரவு தொழிலாளர்கள் வேலை செய்து வந்துள்ளனர். அவர்கள் மீது ஜெகன் நாதன் கார் வேகமாக மோதியுள்ளது. இதில் தமிழரசன் என்கிற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 3 துப்புரவு தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே புதுமாப்பிளையான ஜெகன் நாதன் பொது மக்களால் பிடிக்கப்பட்டு, போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.இதனால் இன்று நடைபெற இருந்த அவரது திருமணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
Step2: Place in ads Display sections

unicc