மாம்பழம் என்று சாதாரணமாக நினைக்காதீர்கள்…!!! அதனால் நமக்கு என்னென்ன பயன்கள் கிடைக்கிறது தெரியுமா…?

முக்கனிகளில் முதன்மையான பழம் தான் மாம்பழம். மாம்பழத்தை விரும்பாதோர் யாரும் இருப்பதில்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மாம்பழத்தை விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த பலத்தை சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

சத்துக்கள் : 

மாம்பழத்தில் உடலுக்கு தேவையான தாது சத்துக்கள் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளது. நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்ட ஒரே பழம் மாம்பழம்.

பயன்கள் :

  • மாம்பழத்தில் கிருமிகளை அளிக்க கூடிய சத்துக்கள் அதிகமாக உள்ளது. இதனால் வயிற்று பிரச்சனைகளிலிருந்து நமக்கு விடுதலை அளிக்கிறது.
  • மாம்பழத்தை அடிக்கடி சாப்பிடுபவர்களின் நரம்புகள் வலுப்பெற்று, நரம்புத்தளர்ச்சி நோய்கள் வராமல் தடுக்கிறது.
  • நமது உடலின் முக்கியமான பாகம் கண். இந்த கண்ணில் எந்த ஒரு நோயும் வராமல் இருக்க அடிக்கடி மாம்பழம் சாப்பிட வேண்டும்.
  • மாம்பழம் பசியை போக்க கூடிய நல்ல உணவாகும்.
  • மாம்பலத்தில் மனிதர்களின் மூளை செல்களை அதிகம் தூண்டக்கூடிய தாது மற்றும் அத்தியாவசிய சத்துக்கள் உள்ளது.
  • உடலில் நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாட்டை அதிகரிக்க செய்கிறது.
  • நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
  • சிறுநீரக கற்கள் உருவாகுவதை தடுக்கிறது.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment