சீன அதிபர் மாமல்லபுரம் வருகை : மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க தடை!

சீன பிரதமர் ஜின்பங்க் நாளை மறுநாள் சென்னை வரவுள்ளார்.  அடுத்த நாள் பிரதமர்

By manikandan | Published: Oct 09, 2019 04:41 PM

சீன பிரதமர் ஜின்பங்க் நாளை மறுநாள் சென்னை வரவுள்ளார்.  அடுத்த நாள் பிரதமர் மோடியும், சீன அதிபரும் மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளனர். பின்னர் அங்கு நடைபெறும் கலைநிகழ்ச்சிகளை இருவரும் பார்வையிட உள்ளனர். இந்த சந்திப்பின் போது, எந்தவித ஆவணங்களும் கையெழுத்தாக போவதில்லை எனவும், மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மாமல்லபுரம் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு வரும் வாகனங்கள் சோதனைக்கு பின்னர்தான் உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. தற்போது மாமல்லபுரம் பகுதியில் ஈச்சம்பாக்கம் முதல் புதுப்பட்டினம் வரை உள்ள கடற்கரை பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மறுஅறிவிப்புவெளியாகும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc