மணிரத்னம் முதல் பாகம் எடுத்தால் நான் இரண்டாம் பாகம் எடுப்பேன்! - இயக்குனர் A.R.முருகதாஸ் அதிரடி!

லைகா நிறுவனம் நிறுவனர் சுபாஸ்கரனுக்கு அண்மையில் மலேசியாவில் டாக்டர் பட்டம்

By Fahad | Published: Apr 02 2020 08:21 AM

லைகா நிறுவனம் நிறுவனர் சுபாஸ்கரனுக்கு அண்மையில் மலேசியாவில் டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. இதற்க்கு சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பாராட்டு விழா எடுக்கப்பட்டது. அந்த விழாவில் இயக்குனர் மணிரத்னம் கலந்துகொண்டார். அந்த விழாவில் பேசிய மணிரத்னம், ' சுபாஷ்கரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒரு திரைப்படமாகவே எடுக்கலாம். அவருடைய வாழ்வில் அவ்வளவு சுவாரசிய சம்பவங்கள் உள்ளன. பிரிட்டனில் ஒரு தமிழர் வெற்றிகரமான தொழிலதிபராக இருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயம் இல்லை. அதற்க்கு பின்னல் அவரது வழக்கை சம்பவங்கள் ஆச்சரியப்படவைக்கின்றன.' என தெரிவித்தார். இது குறித்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் கேட்கையில் , ' சுபாஷ்கரன் வாழக்கை வரலாற்றை மணிரத்னம் இயக்கினால், நான் இரண்டாம் பாகம் இயக்குவேன். அந்தளவிற்கு அவரது வாழ்வில் பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன.' என தெரிவித்தார். லைகா நிறுவனம் அடுத்தத்தக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தையும், மணிரத்னம் இயக்க உள்ள பொன்னியின் செல்வன் படத்தையும் தயாரித்து வருகிறது.

More News From a r murugadoss