ஒரே பிரசவத்தில் 20 குட்டிகளை ஈன்ற லூனா! அடைக்கலம் கொடுத்த அதிகாரிகள்!

லேப்ரடார் கலப்பினத்தை சேர்ந்த நாய் ஒன்று, அமெரிக்காவின் டெக்ஸ்சாஸ் மாகாணத்தின் தெருவோரத்தில், பிரசவ போராட்டத்தில் இருந்துள்ளது. இதனைக்கண்ட விலங்கின பாதுகாப்பு அதிகாரிகள் அதை பத்திரமாக அடைக்கலம் கொடுத்து, அதற்கு ‘லூனா’ என்று பெயரிட்டுள்ளனர்.

இதனையடுத்து அந்த நாய்க்கு கால்நடை மருத்துவர்களால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அந்த நாய் 20 அழகான குட்டிகளை ஈன்றுள்ளது. இதற்க்கு முன்பு 2004-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில், ஒரு நாய் 24 குட்டிகளை ஈன்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.