பிக்பாஸிற்கு பின் கவினுக்காக லொஸ்லியா பதிவிட்ட ட்வீட்!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த பெண் லொஸ்லியா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லொஸ்லியா மற்றும் கவினுக்கு இடையே காதல் ஏற்பட்டது. இவர்களது காதல் பலராலும் பேசப்படும் வகையில் இருந்தது. இதற்கிடையில், பிக்பாஸ்  லொஸ்லியாவின் குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து இவர்கள் இருவரும் வெளியே வந்துள்ளனர். தங்களது காதல் குறித்து லொஸ்லியா பெற்றவர்களின் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்வோம் என கூறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த லொஸ்லியா, தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், பிக்பாஸில் கவினும் கேம் சேஞ்சர் விருது கொடுக்கப்பட்டதை மையப்படுத்தி, தனது ட்வீட்டில், மை கேம் சேஞ்சர் என டேக் செய்துள்ளார்.