கர்நாடகாவில் மலர்ந்தது தாமரை - புதிய முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு !

கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் 

By Fahad | Published: Apr 02 2020 03:46 PM

கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள்  ஆதரவுடன் பாஜக தலைவர் எடியூரப்பா பதவியேற்றார். கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கர்நாடகாவில் எடியூரப்பா 4 வது முறையாக பதவி ஏற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 23 ம் தேதி கர்நாடக சட்டபேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 99 வாக்குகள் மட்டுமே பெற்று முதல்வர்   குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு தோல்வியுற்றது. இதனால், ஆட்சியை பறிபோகி முதல்வர் பதவியில் இருந்து குமாரசாமி பதவி விலகினார். இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் 105 வாக்குகள்பெற்று வெற்றி பெற்ற பாஜக கட்சியை ஆட்சி அமைக்க கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். இந்நிலையில்,கர்நாடக முதல்வராக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் எடியூரப்பா இன்று பதவியேற்றுள்ளார்.