தாமரை குளம் குட்டைகளில்தான் மலரும், தமிழ் மண்ணில் மலராது- திருமாவளவன்

நேற்று  நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் சிதம்பரம் தொகுதியை பொருத்தவரை காலையில் இருந்து வரை மாறி மாறி திமுக கூட்டணியின் வேட்பாளர் திருமாவளவன் மற்றும் அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்து வந்தனர்.

இறுதியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன்–500229 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.இதன் பின்னர் அவர் கூறுகையில், தாமரை குளம் குட்டைகளில்தான் மலரும் எனவும் தமிழ் மண்ணில் மலராது.எதிர்க்கட்சிகள் அனைத்தும் தேசிய அளவில் ஒருங்கிணைந்து தேர்தலை சந்திப்பதற்கான சூழல் அமையாததால், பாஜக அரசு வெற்றி பெற்றுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணிக்கு தமிழக மக்கள் மகத்தான ஆதரவை வழங்கியுள்ளனர். அதிமுக கூட்டணி பொருந்தாத கூட்டணி என முன்பே கூறினோம் .தேசிய அளவில் எது நடக்கக் கூடாது என நினைத்தோமோ, அது நடந்து விட்டது.

வட மாநிலங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளுவதில் அதிகாரிகள் கவனக்குறைவாக இருந்தது, ஐயத்தை ஏற்படுத்தியது .ராகுல்காந்தி உள்ளிட்டோரை இந்துக்களுக்கு எதிரி என்பது போல காட்டினார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment