இடது சாரிகளின் ஆதரவு வேட்பாளர் மெக்சிகோவில் கருத்துக்கணிப்பில் முன்னிலை !

இடது சாரிகளின் ஆதரவு வேட்பாளர் லோபஸ் ஓப்ரடார் (Lopez Obrador) மெக்சிகோவில் நடைபெறவுள்ள தேர்தலில்  வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனவரி 5-ம் தேதியில் இருந்த கடந்த 2ம் தேதி வரை பாராமெட்ரியா என்ற நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தியது. சுமார், ஆயிரம் பேரிடம் நடத்திய கருத்துக் கணிப்பில், ஏற்கெனவே இருமுறை அதிபர் தேர்தலில் இரண்டாம் இடத்தில் வந்த லோபஸ் ஓப்ரடார் 34 சதவீத வாக்குகள் பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆளுங்கட்சி வேட்பாளரை விட லோபஸ் 11 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார். மெக்சிகோவில் லோபெஸ் அளித்த ஊழலை ஒழிப்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இந்த முடிவுக்குக் காரணம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 1-ம் தேதி மெக்சிகோவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment