சூறையாடப்பட்ட சுங்கச்சாவடி ! 35 நாட்களுக்கு பின்னர் திறப்பு

கடந்த ஜனவரி மாதம் சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூரில் சுங்கச்சாவடியில் திருச்சிக்கு சென்ற அரசு பேருந்து ஓட்டுனருக்கு , சுங்கச்சாவடி ஊழியருக்கு இடையே கட்டணம் செலுத்துவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

ஓட்டுநரையும் , நடத்துநரையும் சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் பேருந்தை சுங்கச்சாவடிக்கு குறுக்கே நிறுத்தி உள்ளார்.இதைத்தொடர்ந்து அங்கு 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கோவத்தில் சுங்கச்சாவடியில் இருந்த 12 பூத்களில் இருந்த  கணினி உள்ளிட்ட பொருள்களை பயணிகள் அடித்து நொறுக்கினர். இதையெடுத்து சுங்கச்சாவடியை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதனால் கடந்த 35 நாள்களாக பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் செய்யாமல் இருந்தது. இதன் காரணமாக அனைத்து வாகனங்களும் இலவசமாக சென்றனர்.

இந்நிலையில் இன்று முதல் வழக்கம் போல பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் செய்ய தொடங்கப்பட்டு உள்ளது .

author avatar
Dinasuvadu desk