' அந்த கொசு மருந்து மிஷினுக்கும் நன்றி' - லோகேஷ் கனகராஜ்! தளபதி விஜய்க்கு என்ன ஆயுதம் தரப்போகிறாரோ!?

மாநகரம் படம் மூலம் கவனம் ஈர்த்து அடுத்து கார்த்தியை வைத்து கைதி எனும் படத்தை

By manikandan | Published: Nov 19, 2019 05:42 PM

மாநகரம் படம் மூலம் கவனம் ஈர்த்து அடுத்து கார்த்தியை வைத்து கைதி எனும் படத்தை இயக்கி அந்த படம் வெளியாகும் முன்பே தளபதி விஜயின் 64வது படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று கோலிவுட் வட்டாரத்திற்க்கே அதிர்ச்சி கொடுத்த இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் பிகில் படத்தோடு வெளியான திரைப்படம் கைதி. இந்த படம் நேற்றோடு 25 நாளை கடந்துள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு டிவிட்டரில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நன்றி தெரிவித்து இருந்தார். கூடவே அந்த கொசு மருந்து மிஷினுக்கும் ( கைதி படத்தில் கிளைமேக்சில் கார்த்தி வைத்திருக்கும் மிஷின் துப்பாக்கி ) நன்றி என பதிவிட்டிருந்தார். அதற்கு கீழே, ரசிகர்கள், தளபதி 64இல் தளபதி விஜய்க்கு என்ன ஆயுதம் கொடுக்க போகிறீர்கள் என கேள்வி கேட்டு வருகிறன்றார். அதனூடே டிவிட்டரில், ஆடை பட இயக்குனர் ரத்னகுமாரும் கேள்வி கேட்டுள்ளார். ஆனால் எதற்கும் லோகேஷ் பதிலளிக்கவில்லை. தளபதி 64 படப்பிடிப்பு தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோஹனன், சாந்தனு, என பலர் நடித்து வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc