உள்ளாட்சி தேர்தல் : வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கான வழிமுறைகள் வெளியீடு

உள்ளாட்சி தேர்தல் : வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கான வழிமுறைகள் வெளியீடு

உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கான வழிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்.

தமிழகத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 24 முதல் உள்ளாட்சி பொறுப்புகள் காலியாக இருக்கிறது. கடந்த முறை அதிமுக ஆட்சி அமைத்ததில் இருந்து தற்போது வரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இதன் காரணமாக பணிகள் மெத்தனமாக நடந்து வருவதால் பொதுமக்கள் வெகுவாக சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.

உள்ளாட்சி தேர்தல் நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த மூன்று வருடங்களாக வழக்கு நடைபெற்று வருகிறது.

தற்போது உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கான வழிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்.வாக்குச்சாவடிகள் அமைத்தல் ,வாக்களர் பட்டியலை இறுதி செய்தல் தொடர்பான பணிகளை தொடங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *