ஓட்டு அளிக்கவில்லை என்றால் நலத்திட்டம் எதுவும் கிடையாது-ஆளுங்கட்சி எம்எல்ஏ காட்டம்.!

  • தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் டிச.,27 மற்றும் டிச.,30 இருகட்டங்களாக

By Fahad | Published: Mar 29 2020 02:28 AM

  • தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் டிச.,27 மற்றும் டிச.,30 இருகட்டங்களாக நடைபெற உள்ளது.
  • உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் நலத்திட்டங்கள் எதுவும் கிடையாது என்று சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மக்களிடையே காட்டம்.
தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற் பாடுகளில் தேர்தல் ஆனையம் முனைப்பு காட்டி வரும் நிலையில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.இதற்கான பிரச்சாரமும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. விருதுநகர் மாவட்டம்  சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன்(அதிமுக) சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபாலபுரம்,வடகரை,தென்கரை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார் அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய எம்எல்ஏ ராஜவர்மன் ஒரு சில மக்கள் தங்களுக்கு வாக்களிக்காமல் கோரிக்கைகளை மட்டும் நிறைவற்றி தரும்படி கேள்கிறார்கள் என்று கூறிய சாத்தூர் சட்டமன்ற தொகுதி மக்கள் பிரதிநிதி அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் உங்கள் காலுக்கு செருப்பாக இருப்பேன்.ஆனால் அதிமுகவிற்கு வாக்களிக்க வில்லை என்றால் நலத்திட்டங்கள் எதுவும் செய்து தரமுடியாது என்று காட்டமாக தெரிவித்தார்.