அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும்- அமைச்சர் செங்கோட்டையன்

அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும் என்று அமைச்சர் செங்கோட்டையன்

By venu | Published: Oct 09, 2019 10:10 AM

அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நாங்குநேரி, விக்கிரவாண்டி ,புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதிமுக சார்பாக விக்கிரவாண்டியில் முத்தமிழ்செல்வன் , நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் விக்கிரவாண்டி அருகே மேல்காரணையில் பிரசாரம் மேற்கொண்டார் அமைச்சர் செங்கோட்டையன்.அப்பொழுது அவர் பேசுகையில், அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும். உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான மனுக்களும் டெல்லியில் கொடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
Step2: Place in ads Display sections

unicc