உள்ளாட்சித் தேர்தல் : மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடிய திமுக

ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது.

By venu | Published: Dec 14, 2019 08:45 AM

  • ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது.
  • உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை திமுக நாடியுள்ளது.  
தமிழக மாநில தேர்தல் ஆணையம் ,முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 27ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 30ம் தேதியும் நடைபெறும் என்று அறிவித்தது.மாநகராட்சி,பேரூராட்சி,நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் தற்போது  நடைபெறவில்லை என்று அறிவித்தது. உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு  முறையை சரியாக பின்பற்றவில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் திமுக மற்றும் காங்கிரஸ் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கில் உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு,   2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என தீர்ப்பளித்தது.மேலும் 9 புதிய மாவட்டங்களில் 3 மாதங்களுக்குள் வார்டு மறுவரையறை பணிகளை முடிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன் பின்பு உள்ளாட்சித் தேர்தலுக்கு புதிய அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தீர்ப்பில் சில சந்தேகங்கள் உள்ளதாக தி.மு.க. தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்றும், ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை எதுவும் இல்லை  என்றும் வழக்கை விசாரித்த நீதிபதிகள் ​தெரிவித்தனர்.
Step2: Place in ads Display sections

unicc