பதிவுத்துறையில் பெரும்பாலான வேலை மேஜைக்கு கீழ் தான் நடைபெறுகிறது! – உயர்நீதிமன்ற மதுரை கிளை

பதிவுத்துறையில் பெரும்பாலான வேலை மேஜைக்கு கீழ் தான் நடைபெறுகிறது.

உயர்நீதிமன்ற மதுரை கிளையில், கரூரை சேர்ந்த செந்தில் என்பவர், மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தனது நிலத்தின் சர்வே எண்ணில் உள்ள தவறை சரி செய்ய மண்மங்கலம் வட்டாட்சியருக்கு உத்தரவிடுமாறு கோரியிருந்தார். இதனை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், வட்டாட்சியரின் கடிதத்தின் மீது 2 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காத, தாந்தோணிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு  உத்தரவிட்டார்.

 இந்நிலையில்,இதுகுறித்து கூறிய நீதிபதி, ‘வருவாய் துறையில் இருந்து தான் லஞ்சம் தொடங்குவதாகவும், வட்டாட்சியர் உள்ளிட்டோர் ஆவணங்களை திருத்தி, வருவாய்க்கு மேல் சொத்துக்களை குவிப்பதற்காக தெரிவித்துள்ளார். மேலும் பதிவு துறையில், பெரும்பாலான வேலைகள், மேஜைக்கு கீழ் நடைபெறுகிறது என்று அதிருப்தி தெரிவித்துள்ளார். லஞ்சம் மற்றும் ஊழலில் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு கழக ஊழியர்களையும் குறைத்து மதிப்பிட முடியாது.’ என விமர்சித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.