2021 – ல் “ருத்ரனாக” மிரட்ட காத்திருக்கும் லாரன்ஸ்….! #HappyBirthdayRaghavaLawrence

2021 – ல் “ருத்ரனாக” மிரட்ட காத்திருக்கும் லாரன்ஸ்….! #HappyBirthdayRaghavaLawrence

ராகவா லாரன்ஸ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் ருத்ரன் என்று வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். 

நடிகரும், இயக்குனரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அடுத்ததாக பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் இசையமைப்பளார் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.  இந்த திரைப்படத்திற்கு ருத்ரன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக இன்று படக்குழு அறிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று நடிகர் ராகவா லாரன்ஸின்  44 வது பிறந்த நாளை அவரது ரசிகர்களை கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் பல சினிமா பிரபலங்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். இந்த நிலையில் நடிகர் லாரன்ஸ் அனைவர்க்கும் நன்றி தெரிவித்தும், தனது ரசிகர்களுக்கு அடுத்த படத்தின் அப்டேட் கொடுக்கும் வகையிலும் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

அந்த ட்வீட்டில் “வணக்கம் நண்பர்கள் மற்றும் ரசிகர்களே, இதோ எனது அடுத்த பட தலைப்பு தலைப்பு இதுதான் . எனது பிறந்தநாளில் இதை வெளியிடுவதில் எனக்கு மகிழ்ச்சி. உங்கள் எல்லா ஆசீர்வாதங்களும் எனக்கு தேவை என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு கீழ் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை வெளியிட்டுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube