உள்ளாட்சித் தேர்தல் - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

உள்ளாட்சித் தேர்தல் - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் சுமார் 3 வருடங்களுக்கு மேலாக நடைபெறாமல் உள்ளது.இந்தநிலையில் தான் வருகின்ற டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கு இடையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக   செ.கு.தமிழரசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கில், உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வரை உள்ளாட்சித் தேர்தலை அறிவிப்பை வெளியிட தடை கோரியிருந்தார். மேலும் உள்ளாட்சித்  தேர்தலில்  பட்டியலின ,பழங்குடியினர் பெண்களுக்கு துணை மேயர் துணைத்  தலைவர்  உள்ளிட்ட தலைவர் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இன்று இவரது வழக்கின் மீதான விசாரணை நடைபெற்றது.அதில், ஜனவரி 7-ஆம் தேதிக்குள்  தமிழக அரசு மற்றும்  மாநில தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததுள்ளது.    

Latest Posts

சிறப்பு அந்தஸ்து?? திரும்ப பெறப்படுமா?? ரவிசங்கர் திட்டவட்டம்
மன் கி பாத் இன்று பிரதமர் மோடி உரை
பட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் சிம்புவுக்கு தங்கையாகிறாரா பிரபல நடிகை?
ஒட்டகசிவிங்கியிடம் உதை வாங்கிய காண்டாமிருகம்! பதறியடித்து ஓட்டம்!
டிரம்ப் என்ற நபருக்கு வாக்களித்தேன்..அமெரிக்க தேர்தல் விறுவிறு
கர்ப்பிணி பெண்ணை கொன்று ஃபிரிட்ஜில் வைத்திருந்த முன்னாள் காதலன் கைது!
இன்றைய நாள் எப்படி இருக்கு?? (25/10/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்காக!
ஏமாற்றத்தில் வாகனஓட்டிகள்...இன்றைய நிலவரம்
அட இவ்வளவு நாளா தெரியாம போச்சே! இப்படித்தான் தண்ணீர் குடிக்கணும்!
பாகிஸ்தானில் சாலை விபத்து... சம்பவ இடத்தில் 8 பேர் பலி...