உள்ளாட்சித் தேர்தல் : அதிமுக ஆலோசனை

  • தமிழகத்தில்  இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. 
  • உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது .

தமிழகத்தில்  மூன்று வருடங்களுக்கு மேலாக தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில் டிசம்பர் 27-ஆம் தேதி மற்றும் டிசம்பர் 30 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, சென்னையில் இன்று மாலை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது .அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.