உள்ளாட்சி தேர்தல் -மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தாத தமிழக மாநில தேர்தல் ஆணையத்திற்கு

By venu | Published: Feb 10, 2020 01:45 PM

நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தாத தமிழக மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட  நிலையில்,வழக்கினை தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.   தமிழகத்தில் டிசம்பர் 27-ஆம் தேதி மற்றும் டிசம்பர் 30 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஆனால் மாநகராட்சி,நகராட்சி ,பேருராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும்  தேர்தல் நடைபெற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது . நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தாத தமிழக மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கறிஞர் ஜெய் சுகின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். மேலும் அவரது மனுவில், உச்சநீதிமன்ற உத்தரவை முழுமையாக பின்பற்றாதது நீதிமன்ற அவமதிப்பு என தெரிவிக்கப்பட்டது.இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே,நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என்று கூறி  மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
Step2: Place in ads Display sections

unicc