உள்ளாட்சித் தேர்தல் முடிவு-மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்- துணை முதலமைச்சர் பேட்டி

உள்ளாட்சித் தேர்தல் முடிவு-மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்- துணை முதலமைச்சர் பேட்டி

  • ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
  • முடிவுகள் எதுவாக இருந்தாலும், அதிமுக அதனை தலை வணங்கி ஏற்றக்கொள்ளும் என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல்  இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி  தற்போது வரை வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த வாக்கு எண்ணிக்கையில் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் திமுக  கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.ஆனால் ஆளுங்கட்சியான அதிமுக கூட்டணி இரண்டாம் இடத்தில் உள்ளது.இதற்கு இடையில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் மக்கள் தீர்ப்பை நாங்கள் ஏற்று கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார். 

 

Join our channel google news Youtube