உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு : ஜனநாயக படுகொலை – வைகோ கண்டனம்

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு : ஜனநாயக படுகொலை – வைகோ கண்டனம்

தமிழகத்தில்  மூன்று வருடங்களுக்கு மேலாக தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில் டிசம்பர் 27-ஆம் தேதி மற்றும் டிசம்பர் 30 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது .ஆனால் மாநகராட்சி,நகராட்சி ,பேருராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில்,உள்ளாட்சித்தேர்தல் என்பது மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் உள்ளிட்டவற்றை சேர்த்து நடத்தப்பட வேண்டிய தேர்தல் ஆகும். ஆனால் தமிழக அரசு ஊராட்சிகளுக்கு மட்டும் முதலில் தனியாக தேர்தல் நடத்துவதாக அறிவித்து இருப்பது உள்நோக்கம் கொண்ட திட்டம் ஆகும்.

புதிய மாவட்டங்களுக்கு வார்டுகள் பிரிவினை செய்யாமல், தேர்தல் அறிவித்திருப்பது திட்டமிட்ட ஏமாற்று வேலை.உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு ஜனநாயக படுகொலை என்று  தெரிவித்துள்ளார்.  

 

Join our channel google news Youtube