உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு : முற்றிலும் தவறானது - கே.எஸ்.அழகிரி கருத்து

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு முற்றிலும் தவறானது என்று தமிழ்நாடு காங்கிரஸ்

By venu | Published: Dec 02, 2019 08:21 PM

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு முற்றிலும் தவறானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் டிசம்பர் 27-ஆம் தேதி மற்றும் டிசம்பர் 30 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது .ஆனால் மாநகராட்சி,நகராட்சி ,பேருராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்துவதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில் ,தமிழ்நாட்டில் உள்ளாட்சிகளுக்கு மட்டும் 2 முறை தேர்தல் , அதன்பின்னர்  மாநகராட்சி,நகராட்சி, பேரூராட்சிக்கு தேர்தல் என கூறுவது முற்றிலும் தவறானது என்று தெரிவித்துள்ளர்.    
Step2: Place in ads Display sections

unicc