உள்ளாட்சித் தேர்தல் : அமமுகவிற்கு தனிச்சின்னம் கிடையாது

உள்ளாட்சித் தேர்தல் : அமமுகவிற்கு தனிச்சின்னம் கிடையாது

  • தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.
  • உள்ளாட்சித் தேர்தலில் அமமுகவிற்கு தனிச்சின்னம் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.  
இந்த ஆண்டு தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தல்களில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அமமுக கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை. ஆனால் இதற்கு இடையில் அமமுகவில் உள்ள முக்கிய உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகினாரக்ள்.ஏற்கனவே தேர்தல் தோல்வி ஒரு புறம் அமமுகவை துரத்த மறுபுறம் முக்கிய நிர்வாகிகள் விலகல் அவரை துரத்தியது.இதன் விளைவுகளால் சமீபத்தில் நடைபெற்ற நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் தினகரனின் கட்சி போட்டியிடவில்லை.இதற்கு விளக்கமாக அங்கீகாரம் பெற்ற கட்சி, சின்னம் கிடைத்த பின்புதான் தேர்தலில் அமமுக போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமமுக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதனிடையே உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.தற்போது உள்ளாட்சித் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு தனிச்சின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அமமுக பொருளாளர் வெற்றிவேல் கூறுகையில்,தனிச்சின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து தேர்தல் ஆணையர் நாளை விளக்கம் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.அவர் அளித்த விளக்கத்திற்கு பின்னர் நீதிமன்றத்தை நாடவுள்ளோம் என்று வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

Latest Posts

மேகதாது அணை: உடனே அனுமதி வழங்க பிரதமரிடம் எடியூரப்பா கோரிக்கை.!
பி.பி.ஓ திட்டத்தில் 10,000 இடங்களை ஒதுக்க வேண்டும்.! மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்.!
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தனியார் ஜெட் முனையம் அறிமுகம்.!
கோசி ரயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி 
தனியார் நிறுவனங்கள் இஸ்ரோவின் உள்கட்டமைப்புகளை பயன்படுத்த அனுமதி!
15 ஆண்டுகள் கழித்து மோதும் ரஜினி கமல்...?
விவசாயிகள் தொடர்பான மசோதா விவசாயிகளுக்கும், விவசாயத்துறைக்கும் ஊக்கத்தை அளிக்கும்- அமித் ஷா.!
நாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த தாய்லாந்து எம்.பி
மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு