அரசின் விலையில்லா ஆடு, மாடுகள் வழங்கப்படும் – கால்நடை துறை அமைச்சர்

இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் கேள்வி விவாதத்தில் பூந்தமல்லி தொகுதி உறுப்பினர் கிருஷ்ணசாமி, பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட கொமக்கம்பேடு ஊராட்சியில் கால்நடை கிளை நிலையம் அமைக்க அரசு முன் வருமா? என்று கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த அவர், முதலில் கால்நடை கிளை நிலையம் துவக்கப்பட்ட பின் மருந்தகம் துவக்கப்படும், அதன் பின்னர் தான் அது மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் எம தெரிவித்தார். பின்னர் உறுப்பினர் கூறும் பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட கால்நடை அலகுகள் இல்லை. இருந்தபோதிலும் அது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

இதையடுத்து பேசிய அமைச்சர், அனைத்து பயனாளிகளுக்கும் அரசின் விலையில்லா ஆடுகள், மாடுகள் வழங்கப்படுவதாக பேரவையில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உறுதிப்படுத்தினார். கடந்த 9 ஆண்டுகளில் ரூ.1,656 கோடி செலவில் 46 லட்சத்து 20 ஆயிரத்து 91 கால்நடைகள் வழங்கப்பட்டிருப்பதாக கூறினார். மேலும் கிராமங்களுக்கே சென்று அம்மா ஆம்புலன்ஸ் மூலம் கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்கி பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்கிறது என்று சட்டசபையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்