மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழப்பு..! வீட்டு உரிமையாளர் மீது வழக்குப்பதிவு..!

மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழப்பு..! வீட்டு உரிமையாளர் மீது வழக்குப்பதிவு..!

வடகிழக்கு மழை பெய்து வருவதால் தமிழகத்தின் பல இடங்களில் கனமழை மற்றும் மழை பெய்து வருகிறது.இந்நிலையில் கோவை மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 4 நாள்களாக மழை நீடித்து வரும் நிலையில் மேட்டுப்பாளையத்தில் உள்ள நடூர் பகுதியில் உள்ள ஏடி காலனியில் உள்ள குடியிருப்பின் பக்கவாட்டு சுவர்  சாய்ந்ததால் இன்று அதிகாலை 3 மணி அளவில் நான்கு வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த சம்பவத்தின் போது  வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 17 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் 17 பேர்  உடலை மீட்டனர். மேலும் இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழக்க காரணமானவர்களை   கைது செய்யக் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலை பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்த வீட்டின் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Latest Posts

மதுரையில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார் திமுக தலைவர்!
#KXIP vs SRH: பஞ்சாப்பை வீழ்த்துமா ஹைதராபாத்...!
76 ஆண்டுகளுக்கு பிறகு நாளை இரவு வானில் தோன்றவுள்ள அதிசயம்! என்ன தெரியுமா?
இன்றைய முட்டை விலை..!
யார் யாரு என்னென்ன பேசுறீங்கன்னு நெற்றியில் அடித்தது போல சொல்லுவேன்!
மிலாதுன் நபி: இத்திருநாள் சகோதரத்துவத்தை மேம்படுத்தும் என நம்புகிறேன்! பிரதமர் மோடி ட்வீட்!
ஒரு லட்சம் செலவுப்பா...அம்மாகிட்ட திட்டுவாங்க விடாதீங்க..ரீலிஸ் பண்ணுங்க...
சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு
Airtel வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி
இந்தியாவில் 80 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு - அதிகரிக்கிறதா கொரோனா தொற்று!