நிதி ஆயோக் வெளியிட்ட பட்டியல் ..! கேரளா முதலிடம்,தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் ?

நிதி ஆயோக் வெளியிட்ட பட்டியல் ..! கேரளா முதலிடம்,தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் ?

  • 2019 -ஆம் ஆண்டிற்கான நிலையான வளர்ச்சி இலக்கு பட்டியலை நிதி ஆயோக் வெளியிட்டது.
  • இந்த பட்டியலில் தமிழகம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. 
சமூக ,பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாநிலங்களின் வளர்ச்சியை மதிப்பீடு செய்து ,தர வரிசை பட்டியலை தயாரித்தது நிதி ஆயோக். 2019 -ஆம் ஆண்டிற்கான நிலையான வளர்ச்சி இலக்கு பட்டியலை நிதி ஆயோக் வெளியிட்டது.இந்த பட்டியலில் கேரள மாநிலம் 70 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளது.2 -வது இடத்தில் 69 புள்ளிகளுடன் இமாசலப் பிரதேசம் உள்ளது.3-வது இடத்தில் 67 புள்ளிகளுடன் தமிழ்நாடு,ஆந்திரா,தெலுங்கானா மாநிலங்கள் உள்ளது. வறுமையின்மை பட்டியலில் 72 புள்ளிகள் பெற்று தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.பசியின்மையில் 10-வது இடத்தில் உள்ளது.உடல் நலத்தில் 76 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.கல்வித்தரத்தில் 70 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளது.பாலின சமநிலையில் 12-வது இடம்,சுத்தமான குடிநீர் 7 வது இடம் ,எரிசக்தி 4-வது இடம் ,பணி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் 6-வது இடத்தில் உள்ளது.தொழில்த்துறை,புதுமை கண்டுபிடிப்பு மற்றும் உள்கட்டமைப்பில் 14-வது இடத்தில் உள்ளது.சமநிலையின்மையை குறைப்பதில் 16-வது இடத்தில் உள்ளது.ஒட்டுமொத்த பட்டியலில் தான் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது.மேலும் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலிலும் கேரளா முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

#Breaking : நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்க தேவையில்லை -உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு
நாடாளுமன்ற விவாதங்கள் அனைத்தும் அர்த்தமற்றவை - கார்த்தி சிதம்பரம்!
1997-ஆம் ஆண்டு விஐபி அறையில் வைத்து பாலியல் ரீதியாக டிரம்ப் துன்புறுத்தினார் - முன்னாள் மாடல் புகார்
புல்வாமா தாக்குதல் போல் மற்றோரு தாக்குதல் முறியடிப்பு.! ஜம்முவில் 52 கிலோ வெடிபொருட்கள் கண்டெடுப்பு.!
குறைவான ஊதியத்தை எதிர்த்து நொய்டாவில் ஸ்விக்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!
மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றார்..!
தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு ஐ.ஏ.எஸ் அந்தஸ்து.! அரசாணையை வெளியிட்டார் தலைமை செயலாளர்.!
இதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீக்னஸ்....சஞ்சய் பங்கர்...!
விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளராக புகழேந்தி நியமனம் - துரைமுருகன் அறிவிப்பு
சிகிச்சை பெற்று பெண்ணிடம் தங்க தாலி திருட்டு - ஜிப்மர் மருத்துவமனை!