மாற்றுத்திறனாளிகளுக்காக ரூ.12 லட்சம் செலவில் உதடு மறைவற்ற மாஸ்க் .!

மாற்றுத்திறனாளிகளுக்காக ரூ.12 லட்சம் செலவில் உதடு மறைவற்ற மாஸ்க் .!

12 லட்சம் செலவில் 13500 செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்காக 81000 உதடு மறைவற்ற முகக்கவசம் வழங்கப்படுகின்றன.

செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகள் உடன் அவர்களது பெற்றோர்கள், பாதுகாவலர்கள், உடன் பணிபுரிபவர்கள் ஆகியவர்கள் தகவலை பரிமாற்றம் செய்வதற்கு முக்கியமாக பயன்படுவது உதடு அசைவு .

 செவித்திறன் மற்றும் வாய் பேச இயலாதவர்கள் உதடு அசைவு மூலம் தகவல்களை பகிர்ந்து கொள்கின்றனர். இந்நிலையில் வைரஸ் தொற்று காரணமாக முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளியை  பொதுமக்கள் கடைபிடிக்கவேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளது.

முகக்கவசம் அணிவது மூலம் செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய் பேச இயலாத முடியாதவர்களுடன்  தகவலைப் பரிமாற்றுவது சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்காக தகவலை பரிமாறி கொள்ளும் வகையில் அதற்கேற்ப உதடு மறைவற்ற முகக்கவசங்களை தமிழக அரசு வினியோகம் செய்ய உள்ளது.

இந்த முகக்கவசங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர்கள் மூலமாக செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகள் , அவர்களது பெற்றோர்கள், பாதுகாவலர்கள், பணிபுரிபவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் ரூபாய் 12 லட்சம் செலவில் 13500 செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்காக 81000 உதடு மறைவற்ற முகக்கவசம் வழங்கப்படுகின்றன.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube