கர்ஜிக்க தயாரான சிங்கம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து.!

கர்ஜிக்க தயாரான சிங்கம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து.!

திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இன்று முதல் போட்டியான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இப்போட்டி அபுதாபி உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.

இதனிடையே, திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்து தெரிவித்து, அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மஞ்சள் நிற அணியினர் களத்தில் இறங்கும் நேரம் வந்துவிட்டது என உங்களுக்கு தெரியும், கர்ஜிக்க உள்ள சிங்கங்களுக்கு தமது மண்ணிலிருந்து விசில் அடிப்போம். அத்துடன் கேப்டன் தோனி மற்றும் அணிக்கு வெற்றி கிடைக்க தனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Latest Posts

#IPL2020: சிறப்பாக பந்து வீசிய ஹோல்டர்..155 ரன் இலக்கு வைத்த ராஜஸ்தான்..!
கிசான் சூர்யோதயா, உள்ளிட்ட மூன்று திட்டங்களை திறந்து வைக்கும் பிரதமர் மோடி!
வாணியாறு அணையின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
#BREAKING: ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் - ஸ்டாலின் அறிவிப்பு..!
"பராசக்தி ஹீரோ டா.. நாங்க திரும்பி வருவோம்" தமிழில் பேசி அசத்தும் தாஹிர்!
முதலைக்கடியில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிக்கும் நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
#BREAKING: மசோதா மீது முடிவெடுக்க அவகாசம் தேவை..தமிழக ஆளுநர்.!
பாலியல் பலாத்காரம் செய்ததாக 16 வயது சிறுமி புகார்..சிறுவனை கைது செய்த போலீசார்.!
சீனாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் தைவானுக்கு 1.8 பில்லியன் டாலர் ஆயுத விற்பனை.. டிரம்ப் நிர்வாகம் ..!
கஞ்சா விற்ற டெலிவரி இளைஞர் கைது..!