இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு..!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக

By surya | Published: Jan 04, 2020 11:44 AM

  • தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • வளிமண்டலத்தில் காற்றழுத்த சுழற்சி நிலவுவதால் காரணமாக, மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வடக்கு உள்தமிழகத்திலிருந்து கர்நாடக வரையிலான நிலப்பரப்பில் வளிமண்டலத்தில் காற்றழுத்த சுழற்சி நிலவுவதால், அடுத்த 48 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தளவில் வானம் மேகமுத்ததுடன் காணப்படும் எனவும், நகரில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம், பர்லியாரில் 4 சென்டிமீட்டரும், திருவள்ளூர் மாவட்டதில் உள்ள தாமரைபாகத்தில் 3 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
Step2: Place in ads Display sections

unicc