கோடையில் ஒரு கலக்கலான சுற்றுலா போகலாமா

சுற்றுலா என்றால்  ஆனந்தம் அதுவும் கோடையில் என்றால் அதனை கொண்டாடாதவர்களே இருக்க முடியாது. சுற்றுலா செல்வதால் நம் மனதிற்கும் உடம்பிற்கும் மிகவும் புத்துணர்ச்சியை கொடுக்கும்.மேலும் நம் மனஅழுத்தம் ,வேலைப்பளு குறையும்.ஆனந்தை அள்ளிகொடுக்கும். நம்முடைய உடலையும் மனதையும் ஆனந்தமாக வைத்து  கொள்ள அடிக்கடி சுற்றுலா செல்வது ஒரு மிக சிறந்த தீர்வாகும்.

தற்போது இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நாம் மலை பிரதேசங்கள்,பசுமை மற்றும் எழில் கொஞ்சும் இடங்களுக்கு செல்வது மனதிற்கு ஒரு புதிய புத்துணர்ச்சியை கொடுக்கும். அந்த வகையில் பசுமை ததும்பும் இடங்கள் கேரளாவில் அதிகம்  காணபடுகிறது.ஆலப்புழா கேரளாவில் மிக சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. கோடைகாலங்களில் இந்த இடங்களில் கூட்டம் அள்ளும்.

ஆலப்புழா :

 

கிழக்கின் வெனிஸ் நகரம் என்று அழைக்கபடுகிறது. ஆலப்புழா கேரளாவின்  மிகவும் முக்கியமான இயற்கை எழில் மிகுந்த இடமாகும். விஜயா கடற்கரைப் பூங்காவில் உள்ள பொழுதுபோக்கு வசதிகள், கடற்கரைக்கு கவர்ச்சி சேர்க்கிறது.

அருகில் ஒரு பழமையான கலங்கரை விளக்கும் உள்ளது. படகு பந்தயங்களுக்கும் , விடுமுறைகளுக்கும், கடற்கரைகளுக்கும், கடற்பொருட்களுக்கும், தேங்காய் நார் தொழிலுக்கும் பெயர் பெற்றிருக்கிறது. அழகிய கேரளாவில் மிதக்கும் படகு வீடு இன்னொரு அதிசயம்.  ஆலப்புழா நகரில் உள்ள படகு வீடுகளில் தண்ணீர் மீது தங்கும் அழகிய அனுபவம் வித்தியாசமான சூழலுக்கு நம்மை கடத்திச் செல்கிறது.

 

Leave a Comment