சொத்தைப்பல்லை இயற்கை முறையில் சரிசெய்வதற்கு

To fix the property in a natural way

தற்போது உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று சொத்தைப்பல். இந்த சொத்தைப்பல்லை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் இருந்தால் பல் சொத்தை பாதிப்பு வேரையும் பாதிக்கும். இதனால் பின்னர் நாளடைவில் பல்லை அகற்றும் நிலை ஏற்படும் இதனை தவிர்க்க இயற்கையான முறையில்  எப்படி சொத்தைப்பல்லை சரிசெய்வது என்பது பற்றி பார்ப்போம். வழிமுறைகள்: தினமும் காலையில் நல்லெண்ணெய் வாயில் ஊற்றி 10 நிமிடங்கள் வைத்து கொப்பளிக்க வேண்டும். அப்படி செய்தால் வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் வெளியேறி , பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். மேலும் சொத்தை பற்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம் . காலை எழுந்ததும் வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து பல்துவக்குவதற்கு  முன் ஒரு நிமிடம் வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் மூன்று வேளை உணவு சாப்பிடும் முன் செய்து வந்தால் பல் சொத்தையில் இருந்து விடுபடலாம். மஞ்சத்தூளை சொத்தை பற்கள் இருக்கும் இடத்தில் தேய்த்து விட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் வாய் கொப்பளித்தால் சொத்தைப் பற்கள் குறைந்து விடும். வேப்பிலையை சாரை  சொத்தை பற்கள் மீது தேய்த்து பத்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் வாயை கொப்பளிக்க வேண்டும் .அப்படியில்லையென்றால் தினமும்  வேப்பங்குச்சியை கொண்டு பல்துலக்கினால் சொத்தை பல்களில் இருந்து ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் குணமாகும்.