கல்வி தொலைக்காட்ச்சியில் மாணவர்களுக்கு பாடங்கள் – ஒளிபரப்பாகும் நேரம் என்ன?

கொரோனா தொற்றால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் பள்ளி மாணவர்களுக்காகக் கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஒளிபரப்பை முதல்வர் எடப்பாடியார் துவக்கியுள்ளார். முதல் கட்டமாகத் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணிநேரம் 10-ஆம் வகுப்பு பாடங்கள் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் கல்வி தொலைக்காட்சி யில் மாணவர்களுக்கு எப்போதெல்லாம் பாடங்களுக்கு ஒளிபரப்பப்படும் என்ற அட்டவணையை வெளியிடபட்டு இருக்கிறது. மாணவர்கள் kalvitholaikaatchi.com என்ற இணையதளத்துக்கு சென்று தங்களுது வகுப்புகளுக்கான பாடங்கள் எப்போது ஒளிபரப்பாகும் என்று தெரிந்துகொள்ளலாம்.

இந்நிலையில் வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர அனைத்து நாட்களிலும், 2-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடங்கள் ஒளிபரப்பப்பட உள்ளது. ஒவ்வொரு வகுப்புகளுக்கும் 30 நிமிடம் என்ற அடிப்படையில் ஒளிபரப்புவதற்கு  கல்வித்துறை திட்டமிட்டு இந்த அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.