ஜூலை 20ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது சட்டசபை கூட்டத்தொடர்!

தமிழக சட்டசபை கூட்டதொரை ஜூலை 20 ம் தேதியுடன் நிறைவு செய்ய சபாநாயகர் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜூலை 30 ம் தேதிவரை துறை தமிழக அரசின் துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பணப்பட்டுவாடா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதனால் தேர்தல் பணிஇருப்பதால் கூட்டத்தொடரை விரைந்து முடிக்க வேண்டும் என்று சட்டசபை உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இன்று காலை சட்டசபை சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வு கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தொடரை ஜூலை 20 ம் தேதியுடன் நிறைவு செய்வது என்றும் தினமும் காலை மற்றும் மாலை என்று  இரு வேளைகளில்  என்று முடிவெடுக்கப்பட்டது.