லெஜண்ட் சரவணன் அண்ணாச்சியுடன் உடன் டூயட் படப்போவது ஸ்ருதியா? நயனா?

சென்னை பிரபலமான துணிக்கடை அதிபர் லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி விளம்பர படங்களை அடுத்து ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்தை அவரே தயாரிக்க உள்ளார். ஜே.டி & ஜெர்ரி ஆகிய இரட்டை இயக்குனர்கள் இயக்க உள்ளனர்.

இப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை செய்ய உள்ளார். இப்படத்தில் புதுமுக ஹீரோயின் ஒருவர் நடிக்கிறார். அதுபோல ஒரு முன்னணி ஹீரோயினும் நடிக்க உள்ளார் என படக்குழு அறிவித்து இருந்தது.

இந்நிலையில் அந்த முன்னணி நடிகை ஸ்ருதி ஹாசன் அல்லது நயன்தாரா என இருவரில் யாரேனும் ஒருவராக இருக்க கூடும் என கூறப்படுகிறது. இருவரில் யார் நடிக்கிறார்கள் அல்லது இவர்கள் இல்லாமல் வேறு முன்னணி ஹீரோயின்கள் நடிக்கிறார்களா என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.