குழந்தைகளுக்கு இயற்கையோடு இணைந்து வாழ கற்றுக்கொடுங்கள்….!! இயற்கையோடு இணைந்த குழந்தைகள் எப்படி இருப்பார்கள் தெரியுமா…?

இயற்கை நமக்கு இறைவன் கொடுத்த வரம். இயற்கையோடு இயைந்த வாழ்க்கை என்பது பல மகிழ்ச்சியான தருணங்களை ஏற்படுத்துகிறது. துன்பங்கள் தூளாக்குகின்ற தருணங்கள். இயற்கையோடு குழந்தைகள் இணைந்தால் அவர்களிடம் அமைதியும், அன்பும் தவழும். இந்த உலகமும் செழிப்புமிக்கதாக மாறும். பூமி செழித்தால்தான் மனித வாழ்க்கை செழிக்கும். பூமி செழிக்கவேண்டும் என்றால், இயற்கையை குழந்தைகள் நேசிக்கும் அளவுக்கு அவர்களை பழக்கவேண்டும்.

இயற்கையோடு இணைந்த குழந்தைகள் :

Related image

குழந்தைகள் இயற்கையை நேசித்தால் அது அவர்களது வாழ்க்கையை சுவாரசியமாக்கும், சுகமாக்கும். அவர்கள் சமூகத்திற்கு பயனுள்ளவர்களாகவும் வளர்வார்கள். இயற்கையை நேசிக்கும் குழந்தைகளிடம் சுத்தம், சுகாதாரம், தூய்மை போன்ற நல்ல பழக்கங்கள் உருவாகும். இதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் தோன்றும். இயற்கையை நேசிக்கும் குழந்தைகளிடம் குழுவாக இணைந்து செயல்படும் ஆற்றலும் உருவாகிறது.

சுற்று சூழலின் மேன்மையை கற்று கொடுக்க வேண்டும் :

Image result for சுற்று சூழலி

நம்மை வாழவைப்பது பசுமையான இயற்கைதான். ஆனால் நாம் இயற்கையை வாழ விடுவதில்லை. அதனால் ஏற்படும் விபரீத விளைவுகளைப் பற்றியும் சிந்திப்பதில்லை. சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்துக் கொள்வதின் மேன்மையை அவர்களுக்கு கற்றுக் கொடுக்கவேண்டும். நம்மை சுற்றியிருக்கும் தாவரங்கள் நம் நண்பர்கள். அவைகளை நாம் நேசிக்க வேண்டும்.

சுற்றுப்புற சுத்தம் நாட்டை காக்கும் :

Image result for சுற்றுப்புற சுத்தம்

வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்வதுபோல் சுற்றுப்புற தூய்மையையும் பாதுகாக்கவேண்டும். வீட்டிலுள்ள குப்பைகளை பொறுக்கி சுத்தப்படுத்தவும், பொருட்களை துடைத்து தூய்மைபடுத்தவும் கற்றுத்தர வேண்டும். வீட்டு சுத்தம் குடும்ப நலனைக்காக்கும். சுற்றுப்புற சுத்தம் நாட்டைக்காக்கும் என்று எடுத்துச் சொல்லுங்கள்.

தண்ணீரின் முக்கியத்துவம் :

Image result for தண்ணீரின் முக்கியத்துவம்

பூமியின் நீர் வளங்களைப் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தண்ணீரை எப்படி வீணாக்காமல் பயன்படுத்துவது என்று அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும். வளர்ந்த பிள்ளைகளுக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்து பள்ளிக்கு செல்லவும், கடைக்கு பொருட்கள் வாங்கச் செல்லவும் பழக்கப் படுத்திட வேண்டும். இதனால் உடல் ஆரோக்கியத்தில் புத்துணர்ச்சி பெறுவார்கள்.

மண் வளம் காக்கவும், உயிர்களை நேசிக்கவும், பயிர் பச்சைகளை வளர்க்கவும் உங்கள் குழந்தைகள் கற்று, இயற்கையோடு இணைந்து வாழட்டும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment