உடலுக்கு ஆரோக்கியம் தரும் முள்ளங்கி சப்பாத்தி எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா !

உடலுக்கு ஆரோக்கியம் தரும் முள்ளங்கி சப்பாத்தி எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா !

முள்ளங்கி நமது உடலுக்கு ஏராளமான சத்துக்களை கொடுக்கிறது.முள்ளங்கி சப்பாத்தி எப்படி செய்வது என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு -2 கப்

பச்சை மிளகாய் -2

முள்ளங்கி துருவல் -2 கப்

மிளகாய்த்தூள் -1 ஸ்பூன்

சீரகம் -1 ஸ்பூன்

கொத்த மல்லி -சிறிதளவு

எண்ணெய் -தேவையான அளவு

உப்பு -தேவையான அளவு

செய்முறை :

ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் கோதுமை மாவு ,துருவிய முள்ளங்கி , மிளகாய் தூள் ,கொத்த மல்லி , சீரகம் ,உப்பு பச்சை மிளகாய் சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.

இவை அனைத்தையும் சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து வைத்து கொள்ளவும். அரைமணிநேரம் கழித்துசிறுக சிறு உருண்டைகளாக பிடித்து சப்பாத்தி போல் தட்டி தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும் சப்பாத்தியை போட்டு எடுக்கவும். பின்பு ஒரு புறம் வந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.இப்போது சுவையான முள்ளங்கி சப்பாத்தி தயார்.

 

 

 

Join our channel google news Youtube