முன்னணி ஹீரோ அந்தஸ்தை பெற்றுள்ள பிரபல நடிகர்!

நடிகர் சந்தானம் பிரபலமான நகைசுவை நடிகராவார். இவர் மன்மதன் என்ற திரைப்படத்தில் நகைசுவை நடிகராக அறிமுகமாகி, தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வருகிறார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள A1 திரைப்படம் ரிலீசாகி தமிழகத்தில் மூன்று நாட்களில் 8 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், சந்தானம் நடிப்பில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படம் என்ற பெருமை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கடந்த பிப்ரவரியில் வெளியான தில்லுக்கு துட்டு 2 என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சந்தானம் முன்னணி ஹீரோக்களின் வரிசையில் இணைந்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.