விஷவாயு கசிவு – எல்.ஜி பாலிமர் நிறுவனம் ரூ.50 கோடி செலுத்த உத்தரவு.!

விஷவாயு கசிவு – எல்.ஜி பாலிமர் நிறுவனம் ரூ.50 கோடி செலுத்த உத்தரவு.!

விஷவாயு கசிவுக்கு காரணமாக இருந்த எல்.ஜி பாலிமர் நிறுவனம் ரூ.50 கோடி செலுத்த தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஏற்பட்ட விஷவாயு கசிவுக்கு காரணமான எல்.ஜி பாலிமர் நிறுவனம் ரூ.50 கோடி செலுத்த தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. எல்.ஜி பாலிமர் நிறுவனம் முதற்கட்டமாக ரூ.50 கோடி செலுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிந்ததில் இதுவரை 11 பேர் உயிரிழந்த நிலையில், சுமார் 2000 பேர் விஷவாயுவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே நேற்று விஷவாயு பாதிப்பு ஏற்பட்ட விசாகபட்டினத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். விஷவாயுவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருவோரிடம் நலம் விசாரித்து, பின்னர் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்குவதாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்திருந்தார். இதையடுத்து சிகிச்சை பெறுவோருக்கு ரூ.10 லட்சம் நிவாரணமும், விஷவாயு தாக்கி உயிரிழந்த கால்நடைகளுக்கு நஷ்ட ஈடாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆந்திர மாநில அரசு முழுமையான உதவியை செய்யும் என்றும் முதல்வர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube