தெலுங்கு மெகா ஹிட் படத்தின் தமிழ் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்! யார் இயக்குகிறார் தெரியுமா?!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடைசியாக காஞ்சனா 3 திரைப்படம் வெளியாகி வெற்றிபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது காஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார். இப்படத்தில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இப்படத்தை அடுத்து மீண்டும் தமிழில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை சண்டக்கோழி, பையா, அஞ்சான் ஆகிய படங்களை இயக்கிய லிங்குசாமி இயக்க உள்ளாராம். இப்படம் தெலுங்கில் ராம் சரண், சமந்தா நடிப்பில் மெகா ஹிட்டான ரங்கஸ்தலம் படத்தின் தமிழ் ரீமேக் என கூறப்படுகிறது.
இது போக சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் கால பைரவன் எனும் பாம்புகள் சம்பந்தப்பட்ட அமானுஷ்ய கதையில் இயக்கி நடிக்க ராகவா லாரன்ஸ் கமிட்டாகியுள்ளார் என கூறப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.