லாரி - இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் தலைக்கவசம் அணிந்தும் உயிரிழப்பு..!

லாரி - இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியாதல் தேனீ மாவட்டத்தில் கோர

By balakaliyamoorthy | Published: Dec 11, 2019 03:21 PM

  • லாரி - இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியாதல் தேனீ மாவட்டத்தில் கோர விபத்து.
  • தலைகவசம் அணிந்துச் சென்றும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் தந்தை.
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே இருசக்கர வாகனம் சாலையில் இடறி சரக்கு லாரி டயருக்குள் விழுந்தது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கோடாங்கிபட்டி அடுத்த மாரியம்மன் கோவில்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் தனது மனைவி மாரியம்மாள் மற்றும் ஒன்றரை வயது குழந்தையுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சின்னமனூரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றார். உப்பார்பட்டி விளக்கு என்ற பகுதியில் சென்றுக் கொண்டிருந்த போது எதிர் திசையில் டிராக்டரை முந்துவதற்காக வலது புறமாக முன்னேறியப்படி டிப்பர் லாரி ஒன்று வேகமாக வந்துள்ளது. இதனை எதிர்பாக்காத வேல்முருகன் பதற்றத்தில் உடனடியாக பிரேக்கை  அளித்தியதால் இருசக்கர வாகனம் சாலையில் தடுமாறியது அத்துடன் அதே வேகத்தில் சாலையில் சரிந்தபடியே சென்று லாரியின் டயருக்கு அடியில் சென்று சிக்கியது. மேலும், லாரி டயரில் சிக்கி சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டது . மற்றும் வேல்முருகன் தலைகவசம் அணிந்துச் சென்றும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவியின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. குழந்தைக்கு லேசான காயங்களுடன் உயிர் தப்பியது. விபத்துக்கு காரணம் குறித்து லாரி ஓட்டுநர் ஜான் போஸ்கோவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc