சந்திரயான் 2 விண்கலத்துக்கான கவுண்டவுன் தொடக்கம்

சந்திரயான் 2 விண்கலத்துக்கான கவுண்டவுன் தொடக்கம்

இன்று சந்திரயான் 2 விண்கலத்துக்கான கவுண்டவுன் தொடங்கியது.

ஜூலை 15 ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்த  சந்திராயன் 2  தொழிநுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இஸ்ரோ தெரிவித்தது.இதன் பின்னர்  இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில்,நாளை ( ஜூலை 22  ஆம் தேதி )பிற்பகல் 2.43 மணிக்கு  சந்திராயன் 2  விண்கலம் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது என்று  தெரிவித்தது.

இந்த நிலையில் நாளை விண்ணில் ஏவப்படவுள்ள சந்திரயான் 2 விண்கலத்துக்கான கவுண்டவுன் தொடங்கியது. இதனையடுத்து நாளை சந்திராயன் 2 விண்கலம்   விண்ணில் ஏவப்படுகிறது.

Join our channel google news Youtube