தோனி ஓய்வை பற்றி யோசிக்க வேண்டாம் என கோரிக்கை வைத்த- பாடகி லதா மங்கேஷ்கர்

நேற்றைய நடந்த உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூஸிலாந்து அணியிடம்

By murugan | Published: Jul 11, 2019 05:48 PM

நேற்றைய நடந்த உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூஸிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.இப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால் உலகக்கோப்பையை விட்டு வெளியேறியது. இப்போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அவுட் ஆன பிறகு ட்விட்டரில் "#ThankYouMSD , #ThankYouDhoni" என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆனது.இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி சில ரசிகர்கள் தோனியை பாராட்டியும் , சில ரசிகர்கள் தோனியின் ஓய்வை குறித்தும் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது தோனி ஓய்வை அறிவிக்க கூடாது என பிரபல  திரைப்பட பாடகி லதா மங்கேஷ்கர் தனது ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.பாடகி பாடகி லதா மங்கேஷ்கர் பதிவிட்ட பதிவில் "தோனி நீங்கள் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக கடந்த சில நாள்களாக தகவல் வெளியாகிறது. https://twitter.com/mangeshkarlata/status/1149232640962154497 அப்படி ஓய்வை பற்றி யோசித்து கொண்டு இருந்தால் மாற்றி கொள்ளுங்கள்.இந்திய அணிக்கு உங்களது விளையாட்டு தேவை ,தற்போது ஓய்வை பற்றி யோசிக்க வேண்டாம் என்பது எனது கோரிக்கை" என கூறினார்.
Step2: Place in ads Display sections

unicc