மறைந்த முதல்வர் ஜெ அவர்களின் வீட்டை நினைவிடமாக்க நிலம் எடுப்பு!

மறைந்த தமிழகத்தின் பெண் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக்குவதற்கு நிலம் எடுப்பது குறித்த அறிவிபை சென்னை ஆட்சியர் வெளியிட்டுள்ளார். 

தமிழகத்தில் இரும்பு பெண்மணியாக பல ஆண்டுகள் ஆட்சி செய்து மறைந்த முன்னாள் முதல்வர் தான் ஜெயலலிதா. இவரது மறைவுக்கு பின்பு போயஸ் கார்டனில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசு நினைவிடமாக மாற்றப்படும் என முதலமைச்சர் பழனிச்சாமி ஏற்கனவே கூறியிருந்தார். 

இந்நிலையில், இந்த இல்லத்தை தர போவதில்லை என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வழக்கு தொடர்ந்ததால் இந்த இடம் இதுவரை எடுக்கப்படாமல் அப்படியே விடப்பட்டிருந்தது. 

இந்நிலையில், தற்பொழுது சென்னை மாநகராட்சி ஆட்சியர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அரசுடமை ஆகுவதால் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும், விரைவில் அந்த இடம் நினைவிடம் ஆக்கப்படும் எனவும் ஆட்சியர் கூறியுள்ளார். 

 

author avatar
Rebekal